நிழலுக்கு பயந்த பேய் | தினகரன்

நிழலுக்கு பயந்த பேய்

 

ஜித்தன் 2 ஆவி கதையை இயக்கிய ராகுல் அடுத்து 1 ஏஎம் திகில் படம் இயக்கி இருக்கிறார். அவர் கூறும்போது, ’திகில் படங்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. நண்பர்கள் சிலரால் குடும்பம் பாதிக்கப்பட அவர்களை பழிவாங்க புறப்படுகிறான் மனதளவில் பாதிப்படைந்த ஹீரோ மோகன்.

பங்களா ஒன்றிற்கு செல்லும்போது ஆவியாக நடமாடும் ஹீரோயின் சஸ்வதவை எதிர்கொள்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் எதிர்பாராத நிகழ்வுகளை உருவாக்குகிறது.

இதுவரை பேய் படத்துக்கு தணிக்கை குழுவில் யூ சான்றிதழ் கிடைத்ததாக தெரியவில்லை. முதன்முறையாக இப்படத்துக்கு யூ சான்று கிடைத்துள்ளது.

கார்த்திக் இசை. அருண் ஒளிப்பதிவு. முழுக்க கல்லூரி மாணவர்கள் 15 பேர் நடித்துள்ளனர். 15 நாட்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இம்மாதம் ரிலீஸ்’ என்றார்.

ஹீரோயின் சஸ்வத கூறும்போது,’திருவான்மியூரில் படப்பிடிப்பு நடந்த பங்களாவுக்கு எதிர் வீட்டில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிய வந்தது. பயமில்லாமல் நடித்தேன். மாடியிலிருந்து கீழே பார்க்கும் காட்சியில் நடித்தபோது எதிர்வீட்டில் ஒரு நிழல் உருவம் தெரிவதை கண்டு அலறிவிட்டேன். பிறகு அது மறைந்துவிட்டது. இந்த அனுபவம் மறக்க முடியாது’ என்றார்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...