Thursday, March 28, 2024
Home » கிழக்குப் பல்கலையின் 26ஆவது பட்டமளிப்பு விழா ஒக். 07 இல்

கிழக்குப் பல்கலையின் 26ஆவது பட்டமளிப்பு விழா ஒக். 07 இல்

-இரு தினங்களாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில்

by sachintha
October 3, 2023 8:13 am 0 comment

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (2022) வருடத்திற்கான 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா, இம்மாதம் 07, 08ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் வல்லிபுரமின் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞபாகார்த்த மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா. செல்வராஜா தலைமையில் பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.இந்நிகழ்வில் இலங்கை, மாலைதீவு மற்றும் தென்ஆசியாவிற்கு உரித்தான உலக வங்கியின் முன்னனி பொருளியியலாளரும், மனித அபிவிருத்திக்கான தலைவருமான பேராசிரியர் ஹர்ஷ அதுருபான, இலங்கைக்கான குவைத் நாட்டின் தூதுவர் கலாப் எம். எம். பூ. தாயிர் மற்றும் பொது நலவாய கல்விக்கான பிரதம நிறைவேற்றுத் தலைவரான பேராசிரியர் ஆஷா எஸ் கன்வார் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இப்பொதுப் பட்டமளிப்பு விழாவின் போது கலாநிதிப் பட்டம், கல்வியியல், விவசாய விஞ்ஞானப்பட்டம், கலை, வியாபார நிருவாகம், அபிவிருத்தி பொருளியல் ஆகிய முதுமாணிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.மேலும்,முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டம், வைத்தியமாணி, சத்திரசிகிச்சைமாணி, தாதியியல், விஞ்ஞானமாணி, சித்தமருத்துவ சத்திரசிகிச்சை இளமாணி, சிறப்பு விவசாய விஞ்ஞானமாணி ஆகிய பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 1760 பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இளமாணிப் பட்டங்கள் முதலாம் நாள் (07) முதலாவது அமர்வில் வழங்கப்படவுள்ளது.

முதலாம் நாளின் 2 ஆவது மற்றும் 3ஆவது அமர்வுகளில் வர்த்தகத்துறை சார்ந்த 274 பட்டங்களும் நுண்கலை சார்ந்த 318 பட்டங்களும் வழங்கப்படும்.

இரண்டாம் நாளில் கல்வியியல் மற்றும் விசேட கலைத் துறைகளில் 501 பட்டங்களும், விஞ்ஞானம், கணினிசார் கற்கைளில் 88, மொழி, தொடர்பாடல் மற்றும் உயிரியல் முறை, முயற்சியாண்மை ஆகிய துறைகளில் 255, வணிகத் துறையில் வெளிவாரியாக 56 பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT