சுடும் அதிகாரம் படையினருக்கு இல்லை

இராமேஸ்வரம் மீனவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தைக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

படையினருக்கு எல்லை தாண்டிவரும் மீனவர்களை கைதுசெய்யும் உரிமை இருக்கின்றதே தவிர அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லையென்றும் அவர் கூறினார்.

உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இராமேஸ்வரம் மீனவர் ஒருவர் மீது சர்வதேச கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இவரின் சடலம் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக எல்லை மீறி மீன்பிடித்தால் அவர்களை கைது செய்ய முடியுமே தவிர சுட்டுக் கொல்ல முடியாது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார். நேற்றுமுன்தினம் இரவு மன்னாரை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. எனினும், இலங்கை கடற்படையினர் அதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்  


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 4 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...