சிறைச்சாலை பஸ் துப்பாக்கிச்சூடு; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு (UPDATE)

Rizwan Segu Mohideen
 
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு.
 
 
சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
ஏனைய மூவரும் நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
 

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப்பிரயோகம்; 6 பேர் பலி

 
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர்.
 
இன்று (27) காலை  மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், பாதாளக் குழுவைச் சேர்ந்த 'சமயன்' என அழைக்கப்படும் அருண உதய சாந்த உள்ளிட்ட 5 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
 
களுத்தறையிலிருந்து கடுவெல நீதிமன்றிற்கு சென்ற குறித்த பஸ்ஸை, வேன் ஒன்றில் வந்த  குழுவினர், களுத்தறை, எதனமடல பிரதேசத்தில் வைத்து மறித்து பஸ்ஸினுள் சென்று சராமரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
 
குறித்த நபர்கள் பொலிஸ் சீருடையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 
 
 
 
(Pix by Kalutara Central Group Reporter - Sunil Thanthriarachchi)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 11 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...