Friday, April 19, 2024
Home » களுத்துறை மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு

களுத்துறை மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு

by damith
October 2, 2023 8:02 am 0 comment

களுத்துறை மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்த்த 13 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு உட்பட இருபது இடங்களில் பிரதான வீதிகளில் நாளாந்த போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வலலாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட இஹலகந்த, பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அத கும்புர, புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட நாலியத்த, தம்பல, எட்டம்பகஸ் சந்தி, பரெயி தொழில், கல்லுமலை, தெஹிபிட்டிய பாலத்துக்கு அருகில், தெஹிபிட்டிய, களுவல, மதுராவல கொரட்டுவ, கந்தன, இல்லசத்தன் கொட, கல்லெக் எழ, வெரலுகஸ் துறை ஆகிய தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர சில பகுதிகளில் வீடுகள் மற்றும் மத வழிபாட்டு ஸ்தலங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

வலலாவிட்ட, அகலவத்தை, புளத்சிங்கள மற்றும் மத்துகம உட்பட நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் கட்ட மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட சில பகுதிகளில் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்கும்படி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக் கொண்டு உள்ளது.

களுத்துறை சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT