Thursday, February 16, 2017 - 4:44pm
தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக கே. பழனிசாமி பதவியேற்றுள்ளார்.
கிண்டியில் உள்ள இராஜ்பவனில் சற்று முன் (16) இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன், சீனிவாசன் உள்ளிட்ட அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த 30 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
அ.இ.அ.தி.மு.கவின் எடப்பாடி தேர்தல் தொகுதி எம்.எல்.ஏ.வான கே. பழனிசாமி, அக்கட்சியின் தற்போதுள்ள மிக பழைமைவாய்ந்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment