கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச 24 வரை விளக்கமறியலில் (Update) | தினகரன்

கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச 24 வரை விளக்கமறியலில் (Update)

 
அரச வாகன முறைகேடு தொடர்பில் இன்று (10) காலை கைது செய்யப்பட்ட விமல் வீரவங்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அவர், கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 

 

விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டார்

முன்னாள் அமைச்சரும் தேசிய விடுதலை முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அரச வாகன முறைகேடு தொடர்பான விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இன்று (10) காலை, குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...