வொஸ்னியாக்கி வெற்றி

 

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கி மோனிகா புய்க்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் முதனிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சம்பியன் மோனிகா புய்க்கை (புயர்டோரிகா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சிபுல்கோவா (சுலோவக்கியா) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் லாராவை எளிதில் தோற்கடித்த அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
6 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...