Thursday, March 28, 2024
Home » சுகாதாரத்துறையில் தற்போது நிலவும் பிரச்சினை மருத்துவ அதிகாரிகளின் புலம்பெயர்தல் அல்ல!

சுகாதாரத்துறையில் தற்போது நிலவும் பிரச்சினை மருத்துவ அதிகாரிகளின் புலம்பெயர்தல் அல்ல!

தொழிற்சங்கங்கள் கூறுவது போன்று மருத்துவசேவையில் பிரச்சினைகள் கிடையாது!

by gayan
September 26, 2023 3:08 pm 0 comment

ரஜித் கீர்த்தி தென்னக்கோன்…?

(தமிழில்: வீ.ஆர்.வயலட்)

இன்று சுகாதாரத் துறையில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை மருத்துவ அதிகாரிகள் (MO) புலம்பெயர்தல் அல்ல, நிபுணர்களின் பற்றாக்குறையாகும். இரண்டு தேசிய வைத்தியசாலைகள் மற்றும் 20 போதனா வைத்தியசாலைகளில் அதன் அழுத்தம் இன்னும் உணரப்படவில்லை என்றாலும், மாகாண முதன்மை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் இதுவே மிகப்பெரிய நெருக்கடி.

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட விசேட வைத்தியர்களின் எண்ணிக்கை 2,851 ஆகும். சுகாதார அமைச்சு இன்று 2,574 பேர் பணிபுரிவதாக தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் 2,039 வைத்தியர்களே நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கின்றனர். தற்போது ஓய்வு பெறும் வயது வர்த்தமானி அறிவித்தலில் 31 டிசம்பர் 2024 இல் 63 வயது என்றால், தற்போதுள்ள மருத்துவர்களில் 70-75 பேர் ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

31 டிசம்பர் 2024 இன்படி நிபுணர்களின் ஓய்வுக்கான வயது 60 ஆக இருந்தால், அந்தத் திகதியில் தற்போது பணிபுரியும் எண்ணிக்கையில் 310 பேர் (15%) அன்று ஓய்வு பெறுவார்கள். அங்குதான் உண்மையான பிரச்சினை காணப்படுகிறது!

விசேட மருத்துவர்கள் ஓய்வு பெறும்போது, ​​அதற்கு இணையான மருத்துவர்கள் சுகாதார சேவைக்கு அன்று புதிதாக இணைந்தார்கள். இன்று இந்த சுழற்சி உடைந்துவிட்டது. வெளிநாட்டிற்கு சென்றமை, ஓய்வு பெற்றமை, கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்ததே இதற்கு காரணமாகும்.

விசேட மருத்துவப் பிரிவுகளின்படி பிரச்சினை ஆய்வு செய்யப்பட வேண்டும். மயக்க மருந்து நிபுணர்கள் பற்றாக்குறை ஒரு பயங்கரக் கனவாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மயக்க மருந்து நிபுணர்கள் எண்ணிக்கை 180 ஆக இருக்கும்போது, ​​120 பேரே தற்போது வேலை செய்கின்றனர். செப்டம்பர் 2023, 22 ஆம் திகதி பற்றாக்குறை 60 ஆக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாட்டில் பயிற்சி முடித்த 20 பேரில் 9 பேர் இன்றுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை பெற்றோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக சிலர் மருத்துவமனைகளுக்கு வருவதில்லை. இருவர் (2) இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இணைந்துள்ளனர். அதன்படி பற்றாக்குறையான 60 இல், 9 ஐ மட்டுமே நிரப்ப முடியும். 51 மயக்க மருந்து நிபுணர்கள் பற்றாக்குறையுடன் இந்த ஆண்டு முடிகிறது.

இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க அமைச்சு 25 மருத்துவர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளது. அந்தப் பட்டியலில் ஏற்கனவே 6 பேர் வெளிநாடு சென்றுள்ளார்கள். இன்னும் இருவர் (2) பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் இலங்கைக்கு வரவில்லை. இன்னும் இருவர் பட்டியலில் பெயர் பெற்றிருந்தாலும் பயிற்சியை முடிக்கவில்லை. அதன்படி தீர்வுப் பட்டியல் (ரீ பிளேஸ்மன்ட்) நடைமுறையில் 11 பேர் அல்லது அதற்குச் சிறிது அதிகமாக நிரப்பப்படலாம். அண்ணளவாக 40 நிரப்பப்படாத பற்றாக்குறை தொகையாக எஞ்சியிருக்கும். அதாவது, பி தர எந்தவொரு ஆரம்ப மருத்துவமனையிலும் மருத்துவர்கள் இல்லாத நிலை. (அதாவது மற்றொரு மருத்துவரின் மாற்று வேலை அதாவது அவர்களின் வேலை அதிகரிக்கும்.

நிபுணத்துவ வைத்தியர்களின் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்படுவது வடக்கு, கிழக்கில் உள்ள மருத்துவமனைகளாகும். உதாரணத்திற்கு அம்பாறை வைத்தியசாலைக்கு 20 விசேட வைத்திய அணியினர் தேவைப்படுகின்றனர். இதில் 15 பிரிவுகள் ஏற்கனவே காலியாக உள்ளன. 2024 இற்கான விண்ணப்பங்கள் 5 பிரிவுகளுக்கு மட்டுமே வந்துள்ளன. அம்பாறையில் வசதிகள் இல்லை என்றால் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாந்தோட்டை அல்லது மொனராகலைக்கு நோயாளிகள் செல்ல வேண்டும். திருகோணமலை பொது வைத்தியசாலையில் குறைந்த எண்ணிக்கையிலான விசேட மருத்துவர்களே உள்ளனர். அவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் ஆரம்ப வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கும் சிகிச்சை வழங்க வேண்டும்.

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், சம்மாந்துறை நோயாளர்கள் கல்முனை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளதால் மருத்துவமனை தாங்க முடியாத அழுத்தத்துக்குள்ளாகிறது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டு உழைப்பவர்களுக்கு நாடு நன்றியுடன் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பெண்ணோயியல் மற்றும் மகப்பேறு விசேட மருத்துவர்களின் 168 பணியிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 130 ஆக உள்ளது. அவற்றில் சமீபத்தில் 7 பேர் வெளியேறியோ அல்லது ஓய்வு பெற்றோ சென்றுள்ளார்கள். நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 115. 2023 துணைப்பதிவேட்டில்17 பேரில், இருவர் தற்போது பணிக்கு வருவதில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று பேர் அரசுப் பணியிலிருந்து விலகவுள்ளனர். அப்போது 12 பேர் புதிதாக பணியில் சேருவார்கள்.

பெண்ணோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் 18 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். ஓய்வு பெறும் வயது 60 என்றால் 21 பேர் 2024 இறுதியில் ஓய்வு பெறுவார்கள். (ஓய்வு பெறும் வயது 63 என்றால் 8 பெயர்கள் உள்ளன) காசல், த சொய்சா வைத்தியசாலைகளில் சிரேஷ்டர்கள் அனைவரும் மேலும், களுத்துறை நிபுணர்கள் 3 பேரில் 2 பேர் அவர்களில் உள்ளனர். இறுதியாக 18 வெற்றிடங்கள் ஏற்படுகின்றன.

மூன்றாவது விடயம் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சம்பந்தப்பட்டதாகும். தேசிய வைத்தியசாலை, கண்டி, கராப்பிட்டி, சிறுவர் வைத்தியசாலை, மற்றும் யாழ்ப்பாணத்தில் 5 அலகுகள் இயங்குகின்றன. இலங்கையின் 22 மில்லியன் மக்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் 16 இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களே உள்ளனர். 60 ஆண்டு ஓய்வூதியச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அவர்களில் 6 பேர் (கொழும்பு தேசிய வைத்தியசாலை 5 பேர், கண்டியில் பணிபுரியும் 4 பேரில் ஒருவர்) ஓய்வு பெற வேண்டும். ஒரு மருத்துவர் ஏற்கனவே வெளிநாடு சென்றுள்ளார், மற்றொருவர் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளார். 10 பேர் எஞ்சுவார்கள். பயிற்சி முடித்த எந்தவொரு விசேட இருதய அறுவை சிகிச்சை நிபுணரும் 2024 இல் இலங்கைக்கு வருவதற்கில்லை. தற்போது வெளிநாட்டுப் பயிற்சிக்காக விடுமுறை பெற்ற ஒருவர் இந்நாட்டுக்கு வந்து வெளிநாடு சென்றுவிட்டார். மீதமுள்ள மூன்று பேரும் நாடு திரும்பாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருதய அறுவைச் சிகிச்சை பிரிவுகள் பலவற்றை மூடுவது தவிர்க்க முடியாத விளைவாகும்.

இரண்டு வருடத்திற்கு மேற்பட்டு நீண்டகாலம் அறுவைச் சிகிச்சைப் பட்டியலில் உள்ள நோயாளிகளில் சுமார் 10 வீதமானோர் மரணமடைகின்றனர். நிறைவடைந்த அனுராதபுரம், முன்மொழியப்பட்டுள்ள குருநாகல் மற்றும் மட்டக்களப்பு அலகுகளையும் ஆரம்பிக்க நிபுணர்கள் இல்லை.

நான்காவதாக, அங்கீகரிக்கப்பட்ட திசு நோய்குறியியல் விசேட வைத்தியர்கள் பதவிகள் 75 ஆகும். தற்போது 48 பேரே வேலை செய்கிறார்கள். அண்ணளவாக 23 அல்லது 25 வெற்றிடங்கள் உள்ளன. நோயாளிகளின் நோயைக் கண்டறியும் இந்த மருத்துவப் பிரிவில் ஏற்கனவே 10 பேர் வெளிநாட்டில் உள்ளனர். இருவர் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். 2024 டிசம்பர் 31 இல் வயது 60 ஓய்வூதியச் சட்டம் பொருந்தும் என்றால், மேலும்10 பேர் அரசபணியிலிருந்து விலகுவார்கள். தேசிய வைத்தியசாலையின் மூன்று வைத்தியர்கள் 2022 ஆம் ஆண்டு பல நோய்கள் தொடர்பாக 40,000 பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்கள். புற்றுநோய் உட்பட நோயறிதல்களை மேற்கொள்ளும் நிபுணர்கள் பற்றாக்குறை சுகாதாரத்துறைக்கு பெரும் பாதிப்பாகும். வடமாகாணத்தில் பொறுப்பாக இருப்பவர் பதில் அதிகாரி. அம்பாறை மாவட்டத்தில் முழு சுமையையும் சுமப்பவர்கள் பதில் அதிகாரியும் உதவியாளருமாவர்.

தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆய்வுகூட டெக்னீஷியன்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விசேட வைத்திய சேவை, கண் மருத்துவம், குழந்தை இருதயவியல், அவசர மருத்துவ சேவை, தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை மருத்துவம், தொண்டை, காது, மூக்கு சிகிச்சை, மனநல மருத்துவம் போன்ற பல துறைகளிலும் இது போன்ற நிலையே உள்ளது.

மேலே உள்ள நான்கு எடுத்துக்காட்டுகள் மற்றும் சுமார் 20 எடுத்துக்காட்டுகள் மூலம்

உறுதிசெய்யப்படும் விடயம், உண்மையான மருத்துவப் பற்றாக்குறை காணப்படுவது விசேட வைத்திய நிபுணர் மருத்துவ சேவையிலேயே தவிர, தொழிற்சங்கங்கள் கூறுவது போன்று பொதுவான மருத்துவ சேவையில் இல்லை. சுகாதார அமைச்சும் அரசாங்கமும் எதிர்கொள்ளும் சவால் இதுதான்.

தற்போது 60 வயதில் முன்மொழியப்பட்ட நிபுணர்களின் ஓய்வு வயதை 63 வரை பராமரிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. இதன் மூலம் ஓய்வு பெறும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை 300 முதல் 60 வரை குறைக்கலாம். அரசு இந்தத் தீர்வுக்குள் நுழையும் போது மருத்துவர்கள், தாதியர்கள், ஆய்வகப் பணியாளர்களும் தங்கள் ஓய்வு வயதை அதே அளவு நீடிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். சுகாதாரத் துறையில் கும்பல்கள், குழுக்கள் மற்றும் அணிகளுக்கு இடையே தற்போது நடந்து வரும் மோதல் 4 தசாப்தங்களாகத் தொடர்கிறது.

புதிய மருத்துவர்களுக்கு விசேட மருத்துவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். உடனடியாக கவர்ச்சியான, பாதுகாப்பான முறையை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அல்லாது, கிராமிய கஷ்டப்பிரதேசங்களில் சேவையாற்றுபவர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.

61 சிறப்பு மருத்துவக் குழுக்களில் 43 குழுக்கள் இவ்வாறு நெருக்கடியில் உள்ளன. மருத்துவ நிர்வாகம், தடயவியல் மருத்துவம், சமூக ஆரோக்கியம், உணவு மற்றும் போஷணை துறைகளைத் தவிர அனைத்துத் துறைகளும் படிப்படியாக ஆனால் உறுதியாக இந்தப் பிரச்சினையில் மூழ்கி வருகின்றன.

அதிக எண்ணிக்கையிலான நிபுணர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதால் இரண்டாவது வரிசையில் பயிற்சி பெற யாரும் இல்லை. அதன் விளைவு பல வருடங்களுக்குப் பின்னரே தெரியும். விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயதை நீடிக்க வேண்டியது அவசியம்.

ஓய்வு பெற்ற நிபுணர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் ஆனால் அவர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்க முடியவில்லை. ஏனெனில் அரச சேவைகள் ஆணைக்குழு இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந் நாட்டின் அரச சேவையின் ஒவ்வொரு துறையும் சுகாதாரப் பிரச்சினையின் பங்குதாரர்களே.

இதற்கு விடையாக, 14/2022 சுற்று நிருபம் மூலம், அரசபணியாளர்களுக்கு வெளிநாடு செல்ல அளிக்கப்பட்ட வாய்ப்பு மருத்துவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதைச் செய்வது தொழில் நாகரிகம் இல்லை. குடிமக்களின் குடியேற்றத்தை தடுக்க எமது நாடு கியூபாவோ அல்லது வடகொரியாவோ அல்ல.

பல்வேறு காரணங்களுக்காக (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில்) சேவையை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் அளவைக் கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கைகள் இது வரையில் அமைச்சினால் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மருத்துவர்களின் சேவை ஒப்பந்தங்கள் நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படவில்லை.

சுகாதார அமைச்சில் மனிதவள முகாமைத்துவம் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது. குறைந்தபட்சம் முறையான தரவு தொகுதியும் இல்லை. வேலைவாய்ப்பு, விசேட மருத்துவர்கள் வேலைவாய்ப்பு புறக்கணிப்பு நிபுணர்களை பாதித்துள்ளது. பயிற்சியில் பெற்ற அறிவைப் பயன்படுத்த நவீன உபகரணங்கள் இல்லை. திருத்துவதற்கு மற்றும் உதிரிப்பாகங்கள் வழங்குவதில் தாமதம் காணப்படுகிறது.

கேள்வியுடன் கூடிய சில துறைகளில் வெளிநாட்டுச் சம்பளத்தில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாத சம்பளத்தைக் கொடுத்துவிட்டு வேலையை விட்டுவிட (சுகாதார அமைச்சகத்தின் தற்போதைய பணி நடைமுறையில்) மருத்துவர்களால் முடியும். மோசமான கொள்கை மற்றும் முகாமைத்துவ உத்தி விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேற உதவியாக உள்ளது.

14/2022 சுற்றறிக்கையின்படி மருத்துவர்கள் வெளிநாட்டு விடுமுறையில் இருக்கும்போது அது ‘நாடு மருத்துவர்களை இழக்கிறது’ என்று முத்திரை குத்தப்படுகிறது. ஏனைய அரச ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ‘ரட விருவான்’ ( நாட்டின் வீரர்கள்)என்ற முத்திரை குத்தப்படுகிறது. இன்று முகாமைத்துவ பிரச்சினையே உள்ளது. நிர்வாகத்தின் தோல்வியாகும்.

2023 ஆம் ஆண்டுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் பட்டியலை 10 மாதங்களாக தயாரிக்க முடியாதுள்ளதோடு, 2024 இன் முன்மொழியப்பட்ட பட்டியல் எப்போது வெளிவரும் என்பதை கூறுவது சாத்தியமில்லை. ஆனால் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

சுகாதார தொழில்நுட்ப சேவை மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சேவையின் தடங்கல் காரணமாக அனைத்து பாதிப்பும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையே சென்றடைகின்றன. வைத்திய சங்கங்கள் இந்த உண்மையை அறிந்தும், அனைத்து சுகாதார நெருக்கடியையும் அதன் தொழில் வெற்றிகளை அடைய வற்புறுத்தலாக மாற்றுவது துரதிருஷ்டமே.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT