Friday, April 19, 2024
Home » விவசாய குடும்பங்களை வலுவூட்டும் வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு
அநுராதபுரம் மாவட்டத்தில்;

விவசாய குடும்பங்களை வலுவூட்டும் வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு

by damith
September 25, 2023 11:14 am 0 comment

உலர் வலய விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை கொண்ட குடும்பங்களை வலுவூட்டுவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் குறித்து அரசாங்க அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு அண்மையில் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் 1 – 3 ஏக்கர் விவசாயக் காணிகள் உள்ள சுமார் 100 விவசாய குடும்பங்களை உள்ளூர் மட்டத்தில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் கீழ், கிணறு வசதி உள்ள சுமார் 100 விவசாய குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான உபகரணங்கள் பற்றிய விளக்கமும் இதன் ஊடாக வழங்கப்படவுள்ளதோடு இந்த திட்டம் ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை செயல்படுத்தபடவுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் மூன்று பிராந்திய செயலகப் பிரிவுகளான மிஹிந்தலை, திறப்பனை மற்றும் மத்திய நுவர கம்பளாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னோடித் திட்டமாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT