நிதி மோசடி; கைதான சரத் குமாரவிற்கு விளக்கமறியல் (Update) | தினகரன்

நிதி மோசடி; கைதான சரத் குமாரவிற்கு விளக்கமறியல் (Update)

கோப்பு படம்
 
கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
 
 

ரூபா 112 இலட்சம் மோசடி; சரத் குமார கைது

 
முன்னாள் மீன்பிடி பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன, குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த அரசாங்க காலத்தில், நீர்கொழும்பு களப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கிய ரூபா 112 இலட்சத்தை (ரூ. 1.12 கோடி) மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இது தொடர்பில் இதற்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நால்வரின் பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...