Wednesday, April 24, 2024
Home » சவூதி அரேபியாவின் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன்

சவூதி அரேபியாவின் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன்

by damith
September 25, 2023 5:55 am 0 comment

சவூதி அரேபியாவின் சுதந்திர தினத்தை சிறப்பம்சங்களுடன் கொண்டாட வாழ்த்துவதாக ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனப் பணிப்பாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உதவிப் பொதுச் செயலாளரும் சர்வமத அமைப்பின் உறுப்பினருமான தேசமான்ய கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல்-பைஸர் அல் சவூத் சிறந்த முறையில் ஒருங்கிணைத்ததை நினைவு கூரும் விதமாக தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. மேன்மை தங்கிய இமாம் முஹம்மத் பின் சவூத் முதன் முதலில் சவூதி அரசை நிறுவியதை நினைவு கூரும் விதமாக நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது.

அரேபியக் குடா நாட்டில் சவூதி மிகப் பெரிய நாடாகும். இஸ்லாத்தின் பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட நாடு. புனித இரண்டு ஹரம் சரீப்களைக் கொண்ட கோடான கோடி மக்கள் புனித கஃபாவின் பக்கம் முன்னோக்கி வணக்க வழிபாடுகளை மேற்கொண்டு, ஹஜ் கடமைகளை அங்கு சென்று நிறைவேற்ற வேண்டும்.

மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாடு. அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இடம். இன்னும் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வேளையில் சவூதி அரேபியாவின் மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ், பட்டத்து இளவரசர் முஹம்மது ஸல்மான், சவூதி மக்கள் மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஃதானி உட்பட அனைவருக்கும் பிரார்த்தனைகளுடன் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சவூதி அரேபியா பாரிய பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. பட்டத்து இளவரசர் நாட்டை நவீன மயமாக்கும் திட்டத்தினை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார். இவையனைத்தும் பாராட்டுக்குரிய விடயமாகும்.எமது நாட்டில் கூட சவூதி அரசின் பாரிய வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும் என்றும் அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT