Jaguar Land Rover 2017க்கான மாதிரிகளின் அறிமுகம்

 

Jaguar Land Rover இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ள நவீனமாதிரித் தெரிவுகளைஅண்மையில் வெளியிட்டது. Jaguar Land Rover காட்சியறையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இப்புதிய வாகன மாதிரிகளினையும் புரட்சிகரமான புதிய விரிவாக்கல்களையும் தனித்துவமான தொழில்நுட்பத்தையும் வெளியிட்டது.

Jaguar Land Rover காட்சியறைக்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்ட ரொபின் கொல்கன் முகாமைத்துவப் பணிப்பாளர், Jaguar Land Rover Asia Pacific அவர்களையும், அன்டி வஸ்ட் - வாடிக்கையாளர் சேவை பணிப்பாளர், Jaguar Land Rover Asia Pacific அவர்களையும் இந்நிகழ்வு வரவேற்றது.

அத்துடன் அதிமேதகு ஜேம்ஸ் டொரிஸ் - பிரித்தானியஉயர் ஸ்தானிகர் அவர்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

டிசம்பர் முதல் 2017 ஆரம்பம் வரை அறிமுகப்படுத்தவுள்ள புதியJaguar Land Rover வாகனங்கள் F-PACE செயற்றிறனைக் கொண்டுள்ள Jaguar முதலாவது SUV ஆகும். வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய Jaguar ன் திருப்புமுனையான C-X17 கருப்பொருளுக்கமைய நிகரற்ற இயக்கம் மற்றும் பல்துறைக்கு பெயர் பெற்ற அனைத்து Jaguarகளும் வேகத்துடன் ஒத்துப் போவதும், வினைத்திறன் மற்றும் மெருகேற்றல் போன்றவற்றை F-PACE அம்சங்களாகக் கொண்டுள்ளன. புதிய Range Rover Sports 2017 மாதிரி வருடத்துக்கு, பலமேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வழுப்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஜனவரியில் இலங்கைக்கு அறிமுகமாகவுள்ள புதிய Range Rover Sports சீரமைக்கப்பட்ட சொகுசு செயற்திறன்களைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற தனிப்பயனாக்குதலுக்கான நோக்கத்துடன் புதிய மட்டத்திலான ஆற்றலையும் செலுத்தும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டதும் செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுமான புதிய Land Rover Discovery, இலங்கையில் 2017,மே மாதம் முதல் கிடைக்கக்கூடியதாக இருக்கும். நிகரற்ற செயற்றிறனைக் கொண்ட புதிய Discovery யானது 27 வருடகால பாரம்பரியத்தைக் கொண்டது. இது பிரித்தானிய பாணியுடன் நிகரற்றசாகசத்தை ஒன்றிணைத்த அளவில் பெரிய ஏழு ஆசனங்களைக் கொண்ட SUVஆகும். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...